புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (13:08 IST)

தமிழர்கள் மத்திய அதிக ஓட்டு வாங்கிய ராஜபக்சே கட்சி!!

தமிழகர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சிக்கு வாக்கு அதிகரித்துள்ளது.
 
இலங்கையில் சமீபத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது என்பதும் கொரோனா பரபரப்பையும் மீறி பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்தார்கள். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வாக்காளர்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று வாக்களிக்கவேண்டும் என்றும் இலங்கை அரசு தெரிவித்து இருந்தது. 
 
இந்த தேர்தலில் ராஜபக்சேவின் பொது ஜன பெரமுன கட்சி, சஜித் பிரேமதாஸவின் மக்கள் சக்தி கட்சி, ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி, சம்பந்தன் அவர்களின் தமிழரசுக் கட்சி ஆகிய நான்கு கட்சிகள் போட்டியிட்டதால் 4 முனை போட்டி ஏற்பட்டது. 
 
இந்த நிலையில் நேற்று இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. முதல்கட்ட முன்னிலை நிலவரத்தில் இருந்தே தொடர்ந்து முன்னிலை பெற்று வந்த ராஜபக்சே கட்சி வாக்கு எண்ணிக்கை முடிவில் 145 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.
 
அதில், தமிழகர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சிக்கு வாக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான திரிகோணமலையில் இலங்கை தமிழரசு கட்சி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.