1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 14 ஏப்ரல் 2023 (17:55 IST)

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! மக்கள் பீதி

earthquake
இந்தோனேஷியாவில் இன்று மதியம் 3.25 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.

சில நாட்களுக்கு முன் துருக்கி மற்றும் சிரியாவில் சக்திவாய்ந்த  நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், அடுக்குமாடி குடியிருப்புகள் சரிந்து விழுந்தன. இந்தக் கட்டிய இடுபாடுகளில் சிக்கி பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

இதேபோல் தைவான், இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில்     நில நடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில், இந்தோனேஷியாவில் இன்று மதியம் 3.25 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்தேனேஷியாவின் வடக்குப் பகுதியில் உள்ளள டூபனில் நில நடுக்கம் உணரப்பட்டதாகவும், இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவில் 7.0 ஆகப் பதிவாகியுள்ளது.

இந்த நில நடுக்கத்தில் கட்டிடங்கள் குலுங்கியதாதால் மக்கள் பீதியடைந்தனர். இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கவில்லை.