செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டு பாலத்திலிருந்து தவறி விழுந்து மரணமடைந்த இளம்பெண்

லெனின் அகத்தியநாடன்| Last Modified வியாழன், 6 நவம்பர் 2014 (15:22 IST)
ஸ்பெயினில் சுற்றுலா சென்ற போலந்து நாட்டு இளம்பெண் அங்குள்ள பாலத்தின் மீது நின்று செல்ஃபி எடுத்துக்கொண்ட போது தவறி விழுந்து மரணமடைந்தார்.
சில்வியா ராஜ்செல் (23) தெற்கு போலந்தில் உள்ள மருத்துவப் பல்கலைக் கழகத்தில் செவிலியருக்குப் படித்து வருகிறார். அவர் தனது விடுமுறையைக் கழிப்பதற்காக ஸ்பெயினுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளார். ஸ்பெயினில் உள்ள பழம்பெரும் 'ட்ரியானா' மேம்பாலம் உள்ளது. அதில் தொங்கியபடி செல்ஃபி எடுத்துக்கொள்ள முயற்சித்தபோது நிலை தடுமாறி அங்கிருந்து கீழே தவறி விழிந்தார். உடனே மருத்துவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சில்வியா மரணம் அடைந்தார்.
இது குறித்து அவரது தாயார் பெர்னடேடா (44) கூறுகையில், " அவள் அழகான பெண். அவளுடைய வாழ்க்கையின் அனைத்து நாட்களிலும், சிரித்த முகத்துடனே இருந்தாள். சில்வியாவை இனி ஒருபோதும் காண முடியாது என்பதை நம்புவதற்கே எனக்குக் கடினமானதாக இருக்கிறது.

எனது இதயம் நொறுங்கிவிட்டது. நான் இதை ஏதும் நிகழாத கெட்ட கனவாகவே கருதுகிறேன்" என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :