தமிழக மீனவர் பிரச்னை நிரந்தர தீர்வு கோரி மோடிக்கு கருணாநிதி கடிதம்


K.N.Vadibvel| Last Updated: புதன், 9 செப்டம்பர் 2015 (04:38 IST)
இலங்கைத் தமிழர் பிரச்சினையில், அண்மையில் ஏற்பட்டுள்ள நிகழ்வுகளை நடு நிலையோடு ஆய்வு செய்து, இலங்கைத் தமிழர்களின் நெடுங்கால எதிர்பார்ப்புகளை நிறைவு செய்திடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென்று என திமுக தலைவர் கருணாநிதி, பிரமதர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
 
இது குறித்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் கருணாநிதி ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியுள்ளதாவது:-
 
இலங்கைப் பிரதமராகப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரணில் விக்ரம சிங்கே  அண்மையில் டெல்லிக்கு வருவதையொட்டி, இந்தக் கடிதத்தைத் தங்களுக்கு அனுப்புகிறேன். இந்த மாத மத்தியில் ரணில் விக்ரம சிங்கேவும் , அக்டோபர் மாதத்தில் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறீசேனாவும் டெல்லிக்கு வருகை தரவுள்ளார்கள் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
 
நான் தலைமைப் பொறுப்பில் இருக்கும் திமுக, மிகத் தொன்மைக் காலம் முதல் இலங்கை நாட்டில் வாழ்ந்து வரும் தமிழர் களுடைய பிரச்சினைகளுக்கு நிரந்தரமானதொரு தீர்வு காண வேண்டுமென்று 1956ஆம் ஆண்டிலிருந்தே குரல் கொடுத்து வருவதை தாங்கள் அறிவீர்கள். எனவே இலங்கைத் தமிழர்களுடைய மனக் குறைகளைத் தேவையான போதெல்லாம் உரிய அரங்குகளில் தகுந்த முறையில் பிரதிநிதித்துவப் படுத்தும் முக்கியமான கடமை எனக்கு உண்டு.
 
2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி அன்று தங்களுக்கு நான் அனுப்பிய கடிதத்திற்கு தங்களுடைய அன்பான கவனத்தை ஈர்த்திட விரும்புகிறேன். அதில் பின்வருமாறு நான் விளக்கியுள்ளேன். அதில், இலங்கையில் வாழும் தமிழர்களின் பேராதரவைப் பெற்றே சிறீசேனா இலங்கை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
 
இலங்கைத் தமிழர்கள், தாங்கள் நீண்ட நெடுங்காலமாக சந்தித்து வரும் அரசியல் சட்டத்திற்குப் புறம்பான பாகுபாடு மற்றும் கட்டுப்பாடற்ற மனிதநேயமின்மை ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டு வருவார் என்று பெரிதும் நம்பியே சிறீசேனாவுக்கு விரும்பி வாக்களித்தார்கள். தேர்தலின் போது சிறீசேனாவும்  அவருடைய கூட்டணிக் கட்சியினரும் அளித்த வாக்குறுதிகளை தமிழர்கள் உண்மையிலேயே நம்பினார்கள்.
 
தமிழர்கள் வாழும் பகுதிகளிலிருந்து ராணுவம் திரும்பப் பெறப்பட்டு விடுமென்றும், ராணுவத்தினரும், சிங்களர்களும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ள, தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் வீடுகளை திரும்பப் பெற்று விடலாமென்றும், இனியும் தமிழர்கள் இரண்டாந்தரக் குடி மக்களாக நடத்தப்பட மாட்டார்கள் என்றும், சுயமரியாதையோடும், கண்ணியத்தோடும் கூடிய அமைதியான வாழ்வுக்குரிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுமென்றும், முப்பதாண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வரும் 13வது திருத்தம் நேர்மையான முறையில் அமலுக்குக் கொண்டு வரப்படுமென்றும், தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேறுமென்று தமிழர்கள் எதிர்பார்த்தார்கள்."
 


இதில் மேலும் படிக்கவும் :