வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 23 மே 2023 (08:18 IST)

பிரதமர் மோடிக்கு விருதுகளை அள்ளி வழங்கிய நாடுகள்!

PM Modi
ஜி7 மாநாட்டிற்காக ஜப்பான் சென்ற பிரதமர் மோடி அங்கிருந்து பப்புவா நியூ கினியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்ற நிலையில் அவருக்கு அங்கு விருதுகள் அளிக்கப்பட்டுள்ளது.



இந்திய பிரதமர் மோடி ஜி7 மாநாட்டிற்காக ஜப்பான் சென்றார். அங்கு பல நாட்டு அரசியல் தலைவர்களையும் சந்தித்து பேசிய அவர், நேற்று முன் தினம் அங்கிருந்து பப்புவா நியூ கினியா தீவு நாட்டிற்கு சென்றார். இந்திய பிரதமர் ஒருவர் பப்புவா நியூ கினியா செல்வது இதுவே முதல்முறை.

அங்கு அவர் அந்த நாட்டு மொழியான டோக் பிசின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மரப்புடன் இணைந்து வெளியிட்டார்.

பப்புவா நியூ கினியா அரசு பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான “க்ராண்ட் கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் லோகாகு” என்ற விருதை வழங்கி கௌரவித்தது.

அதே போல பிஜி தீவும் தனது உயரிய விருதான ”கம்பேனியன் ஆப் தி ஆர்டர் ஆப் பிஜி” என்ற விருதை வழங்கு பிரதமர் மோடியை மரியாதை செய்துள்ளது.

Edit by Prasanth.K