செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 7 ஜனவரி 2021 (09:31 IST)

ஈஃபிள் டவரை விட பெரிய விண்கல்.. விழுந்தா அவ்ளோதான்! – பலிக்குமா நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு?

இந்த ஆண்டில் பூமியை ஈபிள் டவரை விட பெரிய விண்கல் ஒன்று தாக்க உள்ளதாக நாஸ்ட்ராடாமஸ் கூற்று வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் எதிர்காலத்தில் நடைபெறும் அழிவு செயல்களை முற்காலத்தில் வாழ்ந்த நாஸ்ட்ராடாமஸ் கணித்து கூறியுள்ளதாக மக்களிடையே நம்பிக்கை நிலவி வருகிறது. முன்னதாக சுனாமி, கொரோனா, போன்றவற்றில் இவரது கூற்று பலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டில் ஈபிள் டவரை விட பெரிய விண்கல் ஒன்று பூமியை தாக்க வாய்ப்புள்ளதாக நாஸ்ட்ராடாமஸ் கணிப்பில் உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மக்கள் பலர் இந்த கூற்றை நம்பினாலும் விஞ்ஞானிகள் “ஆண்டுக்கு பல எரிக்கல்கள், விண்கற்கள் பூமியை கடந்து செல்கின்றன. ஆனால் பூமியை நோக்கி நேர்பாதையில் வந்து தாக்கும் விண்மீன்கள் குறைவே” என கூறியுள்ளனர். நாஸ்ட்ராடாமஸ் கூற்றிலும் கண்டிப்பாக தாக்கும் என உறுதி பட கூறாமல் இருப்பதை சிலர் சுட்டிக்காட்டியும் வருகின்றனர்.