1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 23 டிசம்பர் 2022 (19:08 IST)

கொரோனா பரவலால் வீட்டிற்குள் முடங்கிய மக்கள்

சீனாவில் கொரொனா பரவலை அடுத்து, மக்கள் பீதியில் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். 

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து உலக  நாடுகளுக்கு கொரொனா பரவியது.

இந்த ஆண்டு ஓரளவு கொரொனா தாக்கம் குறைந்த நிலையில், தற்போது, மீண்டும் சீனா, அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது.

இந்த  நிலையில், சீனாவில் உருமாறிய கொரோனா வைரஸான பிஎஃப்-7 ஒமைக்கான்  பரவலாம் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பெய்ஜிங், ஷாங்காய்,  உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும்  மக்கள் பலர் உயிரிக்குப் பயந்து, ஊரடங்கு போல் வீட்டில் முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இதனால் அங்கு பொருளாதார இழப்புகள் ஏற்படும் அபாயமும் தோன்றியுள்ளது.