திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 24 நவம்பர் 2016 (15:46 IST)

பூனை இறப்புக்கு ரூ.2.5 கோடி நஷ்டஈடு கேட்ட பெண்

பாகிஸ்தானை சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவர் தனது வளர்ப்பு பூனை இறந்ததற்கு ரூ.2.5 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.


 

 
பாகிஸ்தானை சேர்ந்த சுந்தஸ்கோரின் என்ற பெண் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் ஒரு பூனையை வளர்த்து வந்தார். அது உடல்நலம் சரியில்லாமல் இருந்துள்ளது. பூனையை கால்நடை மருத்துவரிடம் தூக்கிச் சென்றுள்ளார்.
 
அங்கு பூனைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் நோய் குணமாகவில்லை. இதனால் வேறு மருத்துவரை அனுகியுள்ளார். அதற்குள் பூனை இறந்துவிட்டது. முதலில் சிகிச்சை அளித்த மருத்துவர், தவறுதலான சிகிச்சை அளித்ததால் பூனை இறந்துவிட்டது என கருதியுள்ளார்.
 
இதனால் அந்த மருத்துவர் மீது பெண் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பூனைக்கு தவறான சிக்கிசை அளித்து அது இறந்ததால், ரூ.2.5 கோடி நஷ்டஈடு கேட்டுள்ளார்.