சுதந்திர தினத்தை காஷ்மீருக்கு அர்ப்பணித்து பாகிஸ்தான் சர்ச்சை
இந்தியாவுடன் சர்ச்சையில் இருக்கும் பிரிக்கப்பட்ட பிரதேசமான காஷ்மீருக்கு தங்களின் சுதந்திர தினத்தை பாகிஸ்தான் அர்ப்பணித்துள்ளது.
இந்திய நிர்வாகத்துக்குள்பட்ட காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக அரசியல் அமைதியின்மை ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது.
பாகிஸ்தானின் பிரதமர் நவாஸ் ஷெரிப், ஒடுக்குமுறைக்கு உட்பட்டப்போதிலும் காஷ்மீரில் உள்ள போராட்டக்காரர்கள்தான் சுதந்திரத்திற்கான உணர்வை உயிர்ப்புடன் வைத்திருப்பதாக தெரிவித்தார்.
காஷ்மீர் குறித்த புதிய பேச்சுவார்த்தைக்கான பாகிஸ்தானின் அழைப்பிற்கு பதிலளித்த இந்தியாவும் பாகிஸ்தானை விமர்சித்துள்ளது.
மேலும் எல்லை தாண்டிய பயங்கரவாத்திற்கு பாகிஸ்தான் ஆதரவளிப்பதை நிறுத்துவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தையில் இடம் பெற வேண்டும் எனவும் இந்தியா தெரிவித்துள்ளது.