1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 16 ஜூலை 2022 (10:30 IST)

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.18 மட்டுமே..! – எங்கே தெரியுமா?

Sri Lanka - Petrol
நாடு முழுவதும் பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் ஒருநாட்டில் பெட்ரோல் விலையை கேட்டு மக்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

பாகிஸ்தான் தான் அந்த நாடு. பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வை சந்தித்தது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சிக்கும், சிரமத்திற்கும் ஆளானார்கள்.

ஆனால் பெட்ரோல் விலை சீக்கிரத்தில் குறைக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் உறுதி அளித்திருந்தார். அதன்படி தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் பாகிஸ்தானிலும் பெட்ரோல் விலை குறைந்துள்ளது.

அதன்படி தற்போது பாகிஸ்தானில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.18.50ம், டீசல் விலை லிட்டர் ரூ.40ம் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ள நிலையில், சமீபத்தில் விலை உயர்த்தப்பட்டதற்கு ஷாபாஸ் ஷெரீப் வருத்தம் தெரிவித்துள்ளார்.