திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 11 ஏப்ரல் 2022 (18:16 IST)

இம்ரான்கான் கட்சியின் எம்பிக்கள் கூண்டோடு ராஜினாமா: மீண்டும் தேர்தலா?

imrankhan
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் எம்பிக்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கடந்த சில நாட்களாக பாகிஸ்தானில் அரசியல் குழப்பநிலை இருந்தது என்பதும் இம்ரான்கான் ஆட்சி சமீபத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததால் கவிழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பாகிஸ்தான் புதிய பிரதமராக நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷாபா ஷெரிப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் திடீரென இம்ரான்கான் கட்சியின் எம்பிக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளதால் பாகிஸ்தானில் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது