ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 3 ஏப்ரல் 2022 (08:40 IST)

பாகிஸ்தான் அரசியல் விதியை மாற்றுவாரா இம்ரான்கான்? – இன்று வாக்கெடுப்பு!

பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற உள்ளது.

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில் கடந்த சில நாட்கள் முன்னதாக இம்ரான்கான் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்கட்சி அமளி செய்தது. அதன் விளைவாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

வாக்கெடுப்புக்கு முன்னதாகவே இம்ரான்கான் கட்சிக்கு ஆதரவளித்து வந்த எம்.க்யூ.எம் கட்சி தனது ஆதரவை எதிர்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு வழங்கியுள்ளதால் இம்ரான்கான் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. பாகிஸ்தானில் எந்த பிரதமரும் முழுதாக 5 ஆண்டுகள் ஆட்சி செய்ததில்லை என்ற அரசியல் வரலாற்றை இன்றைய வாக்கெடுப்பில் இம்ரான்கான் முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.