பாகிஸ்தானில் பாதியை மூழ்கடித்த மழை; அவசரநிலை பிரகடனம்!
பாகிஸ்தானில் பெய்த கனமழையால் 3 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதிகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகளை விட அதிகமான மழைப்பொழிவை சந்தித்ததால் பாகிஸ்தானின் 100க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
சுமார் 3.30 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 57 லட்சம் மக்கள் தங்குமிடம், உணவு இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் கனமழை மெற்றும் வெள்ளம் காரணமாக இதுவரை 982 பேர் பலியாகியுள்ளனர். பலர் மாயமாகியுள்ளனர்.
30 ஆண்டுகளாக காணாத கடும் கனமழை வெள்ளத்தை பாகிஸ்தான் எதிர்கொண்டுள்ள சூழலில் நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. ஆனால் வெள்ளம் வடிந்து மக்களின் வாழ்க்கை பழைய நிலைக்கு திரும்ப சில வாரங்கள் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.