திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 1 மே 2023 (15:10 IST)

புதுவையில் விரைவில் ஆன்லைன் ரம்மிக்கு தடை: அமைச்சர் நமச்சிவாயம் தகவல்.!

தமிழகத்தில் சமீபத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் புதுவையிலும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்படும் என அம்மாநில அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். 
 
ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் லட்சக்கணக்கான பணத்தை இழந்து மனவிரக்தியில் தற்கொலை செய்து கொண்டு வரும் நிலையில் தமிழக சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது என்பதும் இந்த சட்டத்திற்கு தமிழக கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார் என்பதும் தெரிந்ததே.
 
இந்த நிலையில் புதுவையிலும் விரைவில் ஆன்லைன் ரம்மிகு தடை விதிக்கப்படும் என மாநில அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தை பாரதிய ஜனதா கட்சி ஒருபோதும் ஆதரிக்காது என்றும் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கப்படும் நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva