1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 4 அக்டோபர் 2020 (08:08 IST)

ஒரே ஒரு லட்சம் புதிய வாக்காளர்கள்: என்ன நடக்குது அமெரிக்க தேர்தலில்?

ஒரே ஒரு லட்சம் புதிய வாக்காளர்கள்:
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அந்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
 
அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்தாலும் அவரது கட்சியினர் அவருக்காக தீவிர வாக்கு வேட்டை நடத்தி வருகின்றனர். அதேபோல் ஜனநாயகக் கட்சியின் அதிபர் ஜோபிடன் அவர்களும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் ஒரு லட்சம் புதிய வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை இணைப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக டேவிட் என்ற இளைஞர் யூ டியூபில் உள்ள தனது சேனலில் புதிதாக வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை இணைப்பவர்களில் 5 பேரை தேர்ந்தெடுத்து விலை உயர்ந்த கார் பரிசளிக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார் மேலும் ஐந்து கார்களுடன் கூடிய புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார் 
 
ஒரே ஒரு லட்சம் புதிய வாக்காளர்கள்:
இந்த பதிவை அடுத்து ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் தான் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை இணைப்பதில் பொதுமக்கள் சோம்பேறித்தனமாக இருக்கின்றார்கள் என்றால் அமெரிக்காவிலும் இதே நிலைமை உள்ளது என்றும் கார் பரிசாக அளிக்கிறேன் என்று சொன்னால் மட்டுமே வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை இணைத்து வருகிறார்கள் என்பதும் இந்த நிகழ்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது