1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 24 மே 2018 (11:43 IST)

அணு ஆயுத சோதனை கூடம் அழிப்பு: பார்வையிட கிம் அழைப்பு!

வடகொரிய அதிபர் கிம் அணு ஆயுத கூடம் பிரிக்கப்படுவதை பார்வையிட சர்வதேச நிரூபர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். முதலில் தென் கொரிய நிரூபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது அவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
 
தென் கொரியாவில் நடந்த குளிர்கால் ஒலிம்பிக் தொடருக்கு பின்னர் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னிடம் மாற்றங்கள் காணப்படுகிறது. இதன் விளைவாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடன் ஜூன் 12 ஆம் தேதி சிங்கப்பூரில் பேச்சுவார்த்தை நடக்க திட்டமிடப்பட்டுள்ளது. 
 
அணு ஆயுத சோதனையை தொடர்ந்து நடத்துவதில்லை என்று கிம் உறுதி அளித்துள்ளார். அதை உறுதிப்படுத்தும் விதமாக பங்கி-ரி பகுதியில் உள்ள அணு ஆயுத சோதனை கூடத்தைப் பிரித்து வருகிறோம் என்று வடகொரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 
அணு ஆயுத சோதனை கூடம் பிரிக்கப்படுவதைப் பார்வையிட சர்வதேச ஊடகங்களை சேர்ந்த நிருபர்கள் பலருக்கு வடகொரியா அனுமதி அளித்தது. முதலில் தென் கொரிய நிருபர்களுக்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டது. தற்போது அவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.