1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By Geetha Priya
Last Modified: சனி, 3 மே 2014 (15:47 IST)

இந்தியர்களுக்கு வீடு கொடுக்க மறுக்கும் சிங்கப்பூர் மக்கள்

சிங்கப்பூரில் இந்தியர்களுக்கு வாடைகைக்கு வீடு கொடுக்க சிங்கப்பூர் மக்கள் தயக்கம் காட்டிவருவதாகவும், இதனால் அங்கு வசிக்கும் இந்தியர்கள் அவதிக்குள்ளாவதாகவும் தெரிவிக்கப்பட்டது. 
சிங்கப்பூரில் வாடகைக்கு வீடுகளை பெற  தகவல்களை பதிவு செய்யும் பல இணையதளங்களில், 'இந்தியர்கள், சீனர்களுக்கு வீடு தரப்படமாட்டாது' என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.  
 
குறைந்த வீடுகளை வாடகைக்கு அளிப்பது தொடர்பாக இணையதளங்களில் நேரடியாக விளம்பரங்களை வெளியிடும் உரிமையாளர்கள், இந்தியர்கள் அணுக வேண்டாம்... ‘மன்னிக்கவும்’ என்ற  வாசகங்களுடன் தற்போது வாடகைக்கு ஆள் தேடுகின்றனர். 
 
சமீப காலமாக இந்தியர்களுக்கு எதிராக பெருகிவரும் இத்தகைய பாகுபாடு மற்றும் பாரபட்சத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு சிங்கப்பூர் அதிபர் டோனி டான் மற்றும் பிரதமர் லீ ஹ்சியென் லூங் ஆகியோருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
சிங்கப்பூரில் தங்கிவரும் இந்தியர் ஒருவர் இது குறித்து கூறுகையில், நான் வீடு தேடிய போது எனக்கு உதவி செய்தவர், இந்தியர்கள் வீடுகளை சரியாக சுத்தம் செய்யாமலும் முறையாக பராமரிக்காமலும் இருப்பதால் வீடு கிடைப்பதில்லை எனவும், அதிக எண்ணெய் மற்றும் அதிக வாசனையை கிளப்பும் மசாலா பொருட்களை கொண்டு அவர்கள் சமைப்பதும் வீடு கிடைக்காமல் இருப்பதற்கு ஒரு காரணமெனவும் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.