வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 3 ஏப்ரல் 2017 (18:15 IST)

சீனா, ரஷ்யா வரை சென்ற தமிழக விவசாயிகள் போராட்டம்!!

தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 21 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.


 
 
தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை போரட்டத்தில் முன்வைத்துள்ளனர். 
 
விவசாயிகளுக்கு ஆதரவாக பிற மாநில விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
தமிழக விவசாயிகள் போராட்டத்திற்கு தமிழகம் மட்டுமின்றி பிற நாடுகளில் உள்ள தமிழர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
 
தற்போது இந்த போராட்டம் சீனா மற்றும் ரஷ்ய நாடுகளின் கவனத்தை ஈர்த்து உள்ளது. சீனா, மற்றும் ரஷ்யாவின் பத்திரிகைகள் தமிழக விவசாயிகளின் போராட்டத்தை செய்தியாக வெளியிட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.