செவ்வாய், 11 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Caston
Last Modified: வெள்ளி, 3 ஜூன் 2016 (11:57 IST)

நாளையுடன் உலகம் அழிகிறது: டூம்ஸ்டே ஆராய்ச்சியளர்கள் தகவல்!

உலகம் எப்பொழுது அழிகிறது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்கள் டூம்ஸ்டே எனப்படும் உலக அழிவின் கடைசி நாளை அறிவித்துள்ளனர்.


 
 
மாயன் காலண்டரின் கணிப்பின் படி கடந்த 2012-ஆம் ஆண்டு உலகம் அழியும் என பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் உலகம் அழியவில்லை தற்போது 2016-ஆம் ஆண்டுக்கு வந்துவிட்டோம்.
 
இந்நிலையில் மாயன் காலண்டரின் டூம்ஸ்டே கணிப்பு எப்படி பொய்யானது என்ற ஆர்ய்ச்சியில் ஈடுபட்ட டூம்ஸ்டே ஆராய்ச்சியாளர்கள் தற்போது புதிய டூம்ஸ்டேயை அறிவித்துள்ளனர். அவர்களின் கணிப்பு படி ஜூன் 3 மற்றும் 4 தேதிகளில் உலகம் அழியும் என குறிப்பிட்டுள்ளனர். அதாவது இன்றும் நளையும் தான் உலகத்தின் கடைசி நாட்கள் என்கிறார்கள்.
 
மீசோ அமெரிக்கன் லாங் கவுன்ட் காலண்டரின் 5126 ஆண்டு கால சுழற்சி முடிவில் இருந்து இந்த தேதிகள் கணிக்கப்பட்டுள்ளன. இந்த மீசோ அமெரிக்கன் லாங் கவுண்ட் காலண்டர் உலகத்தின் முடிவு சார்ந்த ரகசிய செய்தி என நம்பப்படுகிறது.
 
இந்த காலண்டர் ஆய்வின்படி, குறிப்பிட்ட நான்கு கிரகங்கள் அணிவகுத்து ஒரு சதுரத்தை உருவாக்கும் என்றும், அந்த சதுர அம்சம் கிரகங்களுக்கிடையே ஒரு 90 டிகிரி பிரிவை உண்டாக்கி உராய்வு ஏற்பட காரணமாக திகழும் என்று கணிக்கப்பட்டுள்ளது.