வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 29 ஏப்ரல் 2020 (17:47 IST)

இங்கிலாந்து பிரதமருக்கு ஆண் குழந்தை: தாய், சேய் நலம் என தகவல்

இங்கிலாந்து பிரதமருக்கு ஆண் குழந்தை
இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் மற்றும் கேரி சைமண்ட்ஸ் தம்பதிக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. குழந்தை நலமுடன் இருப்பதாக போரீஸ் ஜான்சன், கேரி சைமண்ட்ஸ் தம்பதி கூட்டாக அறிவிப்பு செய்துள்ளனர். கேரி சைமண்ட்ஸ் போரீஸ் ஜான்சனின் மூன்றாவது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது
 
போரீஸ் ஜான்சன் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென அவரது உடல்நில கவலைக்கிடமாக இருந்ததாக செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது அவர் உடல்நிலை தேறி மருத்துவமனையில் இருந்தே அரசு பணிகளை கவனிக்க தொடங்கிவிட்டார்.
 
இந்த நிலையில் முழுமாத கர்ப்பிணியாக இருந்த போரீஸ் ஜான்சன் மனைவி கேரி சைமண்ட்ஸ் அவர்களுக்கு இன்று காலை அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனை பிரதமர் அலுவலகம் உறுதி செய்ததை அடுத்து இங்கிலாந்து பத்திரிகைகள் இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ளன. போரீஸ் ஜான்சன், கேரி சைமண்ட்ஸை கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பதும், ஏற்கனவே அவருக்கு இரு மனைவிகள் மூலம் 4 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.