1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (21:18 IST)

கொரோனா வைரஸ் அவுட்.. ஷெகில்லா பாக்ட்ரீயா இன்.. அமெரிக்கா மக்கள் அலறல்..!

bacteria
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியா உள்பட உலக நாடுகள் முழுவதிலும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர் என்பதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வழியாக கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடித்து இயல்பு நிலை திரும்பி உள்ள நிலையில் தற்போது ஷெகில்லா என்ற பாக்டீரியா மனித குலத்தையே அச்சுறுத்து வருகிறது. இந்த பாக்டீரியா மனித குலத்திற்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது என்பது மட்டுமின்றி இந்த பாக்டீரியாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த பாக்டீரியா ஒருவருக்கு ஒருவர் மிக வேகமாக பரவும் தன்மையுடையது என்றும் குறிப்பாக ஷவர்மா சாப்பிடுவதால் தான் இந்த பாக்டீரியா பரவி வருகிறது என்று கூறப்படுகிறது. 
 
அமெரிக்காவில் அதிக நபர்களுக்கு இந்த பாக்டீரியா பரவி வருவதால் அந்நாட்டு மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva