வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வியாழன், 13 ஜூலை 2017 (06:40 IST)

நெதர்லாந்து: குற்றங்களும் இல்லை, கைதிகளும் இல்லை: மூடப்படும் சிறைச்சாலைகள்

நெதர்லாந்து நாட்டில் குறைவான குற்றங்களே நடப்பதால் அந்நாட்டின் சிறைகளில் பெரும்பாலானவை காலியாக உள்ளது. எனவே தங்கள் நாட்டு சிறை அறைகளை பக்கத்து நாடுகளுக்கு வாடகைக்கு விட நெதர்லாந்து அரசு முடிவு செய்துள்ளது.



 
 
குற்றவாளிகளே இல்லாததால் பல சிறைச்சாலைகள் ஏற்கனவே முடப்பட்டு அந்த கட்டிடங்கள் பல்வேறு பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் இருக்கும் ஒருசில சிறைகளிலும் கைதிகளின் எண்ணிக்கை வெகு குறைவாக உள்ளது.
 
குறிப்பாக பெண்கள் சிறை சுத்தமாக காலியாக உள்ளதாக கூறப்படுகிறாது. இந்த நிலையில் காலியாக உள்ள சிறைகளை நார்வே உள்பட மற்ற நாடுகளுக்கு வாடகைக்கு விட முடிவு செய்யப்பட்டு அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலை உள்ளது.