வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 15 டிசம்பர் 2018 (08:00 IST)

இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்த நேபாளம் ?

இந்தியாவின் அதிக மதிப்புக் கொண்ட ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பதற்கும் பரிவர்த்தனை செய்வதற்கும் நேபாள அரசு தடை விதித்துள்ளது.

கடந்த டிசம்பர் 10 ஆம் தேதியன்று நேபாளத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தியாவின் உயர் மதிப்புக் கொண்ட ரூபாய் நோட்டுகளுக்குத் தடை விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ரூ.200, ரூ.500, ரூ.2000 தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தகைய ரூபாய் நோட்டுகளை வைத்திருக்க வேண்டாம் எனவும், கையில் இருக்கும் நோட்டுகளை உடனே பரிவர்த்தனை செய்துவிடும்படியும் நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டடுள்ளது.

நேபாளிகள் அதிகளவில் இந்தியாவில் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் சுற்றுலாப் பயணிகள், வர்த்தகர்கள் ஆகியவர்களை இந்த ரூபாய் நோட்டுகள் பாதிப்பதாகவும் மேலும் நேபாள ரூபாயின் மதிப்பு வீழ்ச்சிக் காரணமாகவும் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இதுசம்மந்தமாக நேபாள தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில் ’ ரூ.200, ரூ.500, ரூ.2000 ஆகிய இந்திய ரூபாய் நோட்டுகளை நாட்டுக்குள் புழக்கத்தில் வைத்திருப்பது இனி சட்ட விரோதமாகும். ஆகையால் இந்த ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தாமலும், வைத்திருக்காமலும், இருப்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்’.

ஆனால் இந்த ரூபாய் நோட்டுத் தடையில் 200 ரூபாய்க்குக் கீழ் உள்ள நோட்டுகளுக்குத் தடையில்லை என்பதால் அந்த நோட்டுகளைப் பயன்படுத்தலாம் என தெரிகிறது.