1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 21 பிப்ரவரி 2017 (11:35 IST)

விண்வெளி நிலையத்தை சுற்றி வந்த வேற்று கிரகவாசிகள் - நாசா வெளியிட்ட வீடியோ

வானில் நிறுவப்பட்டிருக்கும் விண்வெளி நிலையத்தை சுற்றி வந்த வேற்று கிரகவாசிகளின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் சேர்ந்து விண்வெளியில் ஆய்வகம் ஒன்றை உருவாக்கி வருகிறது. அந்த பணியில் 4 மாதங்களுக்கு ஒருமுறை 3 பேர் சென்று பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்நிலையில், அந்த ஆய்வகத்தை அடையாளம் தெரியாத 6 ஒளி போன்ற பொருட்கள் சுற்றி வந்தன. இதை பூமியிலிருந்து நாசா ஆய்வகத்தில் பணிபுரியும் ஒரு ஊழியர் பார்த்துள்ளார்.  அவைகள் வேற்று கிரகவாசிகளாக இருக்கலாம் எனவும், அவைகள் வந்த பறக்கும் பொருள் மிகப்பெரியதாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். அந்த வீடியோ நாசா சமீபத்தில் வெளியிட்டது. 
 
ஆனால், இந்த சம்பவம் நடந்த போது, அந்த வீடியோவை நாசா திடீரென துண்டித்தது. மேலும், அது வேற்று கிரவாசிகள் இல்லை. லென்சில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வீடியோவில் அப்படி தோன்றியது என நாசா மறுத்துள்ளது.
 
வேற்று கிரகவாசிகள் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் நாசா, இதுபோன்ற தகவல் வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகவே, இப்படி கருத்து தெரிவித்துள்ளதாக தெரிகிறது.