வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: செவ்வாய், 27 ஜூன் 2017 (18:17 IST)

சனிக்கோளின் விடியல் புகைப்படத்தை வெளியிட்ட நாசா

நாசாவின் கசினா செயற்கைகோள் மூலம் கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி எடுக்கப்பட்ட சனிக்கோளின் விடியல் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.


 

 
கசினா என்ற செயற்கைகோள் கடந்த 13 வருடமாக சனிக்கோளை சுற்றி வந்து ஆராய்ச்சி செய்து வருகிறது. சனிக்கோளில் விடியல் எப்படி இருக்கும் என்ற புகைப்படத்தை தற்போது நாசா வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் மார்ச் மாதம் 31ஆம் தேதி எடுக்கப்பட்டது. சனிக்கோளிலிருந்து சுமார் 6,20,000 மைல் தூரத்தில் இருந்து இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. 
 
சனிக்கோளை சுற்றி பனிப்படலமாக இருக்கும் அதன் வளையங்கள் இந்த புகைப்படத்தில் தெரிகிறது. சனிக்கோள் சுரியனை சுற்றி வர 29 வருடங்கள் எடுத்துக்கொள்கிறது. அது தன்னை தானே சுற்றி வர 10 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது. இதுவரை அதன் விடியல் குறித்து எந்த புகைப்படமும் இல்லாத நிலையில் தற்போது நாசா அதன் விடியல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.