வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Modified: புதன், 28 ஜனவரி 2015 (14:50 IST)

மார்ச்சில் இலங்கைக்கு செல்கிறார் நரேந்திர மோடி, பிப்ரவரியில் இந்தியா வருகிறார் சிறிசேனா

பிரதமர் நரேந்திர மோடி மார்ச் மாதம் அரசு முறைப்பயணமாக இலங்கைக்குச் செல்ல உள்ளார், அதேபோல இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அடுத்தமாதம் இந்தியாவுக்கு வருகிறார்.
 
மைத்திரிபால சிறிசேனா இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்ற பின்னர், இந்தியாவுடனான நட்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் சமீபத்தில் டெல்லிக்கு வருகை தந்தார். 
 
அவர், பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை இலங்கைக்கு வருமாறு அழைத்தார்.
 
இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட நரேந்திர மோடி மார்ச் மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஆனால், நரேந்திர மோடி இலங்கை சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளும் தேதி குறித்த உறுதியான தகவல் வெறியிடப்படவில்லை.
 
கடந்த 2008 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் அரசு முறைப்பயணமாக அல்லாமல், சார்க் மாநாட்டில் கலந்து கொள்வற்காக இலங்கை சென்றார்.
 
முன்னளாள் பிரதமர் ராஜீவ்காந்தி  1987 ஆம் ஆண்டு  அரசு முறைப்பயணமாக இலங்கைக்கு சென்றார். இந்நிலையில் ராஜீவ்காந்திக்குப் பிறகு அரசு முறை பயணமாக நரேந்திர மோடி இலங்கைக்கச் செல்ல உள்ளார்.
 
இந்நிலையில், இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா, பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி இந்தியாவுக்கு வர உள்ளார்.  19 ஆம் தேதி வரை அவர் டெல்லியில் தங்கி இருந்து பல்வேறு தலைவர்களை சந்தித்துப் பேச உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.