திங்கள், 4 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 10 மே 2021 (08:47 IST)

கொந்தளிக்கும் மியான்மர்; மக்கள் பிரதிநிதிகள் பயங்கரவாதிகள்! – இராணுவம் அறிவிப்பு!

மியான்மரில் மக்களாட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவ ஆட்சி கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை பயங்கரவாதிகளாக ராணுவம் அறிவித்துள்ளது.

மியான்மரில் ஆங் சான் சூகி தலைமையிலான மக்களால் அமைந்த ஜனநாயக ஆட்சியை தேர்தல் ஊழல் என குற்றம் சாட்டி கலைத்த ராணுவம் மியான்மரில் ராணுவ ஆட்சியை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர் 100க்கும் அதிகமானவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

மியான்மர் ராணுவத்தின் இந்த சர்வாதிகார போக்கை எதிர்த்து மக்கள் போராடி வரும் நிலையில், தப்பித்து தலைமறைவான மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கான புதிய அமைப்பாக சி.ஆர்.பி.எச்-ஐ தொடங்கியுள்ளனர். இந்நிலையில் அந்த அமைப்பை பயங்கரவாத இயக்கமாக மியான்மர் ராணுவம் அறிவித்துள்ளது. அந்த அமைப்பிற்கு உதவும் மக்கள் மீது தேசத்துரோக வழக்கு பதியப்படும் எனவும் எச்சரித்துள்ளது.