புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 3 நவம்பர் 2016 (19:53 IST)

தூங்காமல் குறும்பு செய்த குழந்தைகள்: போதை ஊசி போட்ட தாய்

அமெரிக்காவில் தாய் ஒருவர் தூங்காமல் அடம்பிடித்த குழந்தைகளை போதை ஊசி போட்டு தூங்க வைத்துள்ளார்.


 

 
அமெரிக்கா வாஷிங்டன் பகுதியை சேர்ந்த அஷ்லி என்ற பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். 2 வயது, 4 வயது மற்றும் 6 வயதுடைய குழந்தைகள். இந்த குழந்தைகள் அனைத்தும் தூங்காமல் ரொம்ப அடம்பிடித்துள்ளனர். 
 
குழந்தைகள் தூங்காமல் அடம்பிடித்தால் அவர்களை தாய் தாலாட்டி, கதை சொல்லி தூங்க வைப்பது வழக்கம். ஆனால் அஷ்லி அவரது குழந்தைகள் தூங்காமல் அடம்பிடித்ததால், அவர்களுக்கு போதை ஊசி போட்டு தூங்க வைத்துள்ளார்.
 
தாய் என்ற பண்பில் இருந்து மீறி மிகவும் கொடூரமாக நடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அஷ்லியை கைது செய்தனர். மேலும் அஷ்லியின் 6 வயது மகன், தனது தாய் கழுத்தை நெரித்து ஊசி போடுவார் என்று விசாரணையில் கூறியுள்ளான்.