1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 6 டிசம்பர் 2017 (15:47 IST)

தாய்க்கும் மகளுக்கும் ஒரே கணவர்: வினோத பாரம்பரியம்!!

வங்கதேசத்தில் பின்பற்றப்படும் வினோத பாரம்பரியம் ஒன்று அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம், தாயும் மகளும் ஒரே ஆணை திருமணம் செய்ய வேண்டும் என்பதுதான் அது. 
 
வங்கதேசத்தில் உள்ள மாண்டி என்ற பழங்குடியினத்தை சேர்ந்த விதவை பெண்களுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த திருமண முறையால் பதிக்கப்பட்ட மிட்டாமோனி என்ற பெண் ஒருவர் இது குறித்து பேசியுள்ளார்.
 
அவர் கூறியதாவது, எனது தாயின் இரண்டாவது கணவர், அதாவது எனது வளர்ப்பு தந்தை பார்ப்பதற்கு அழகாக இருப்பார். அவரை போல்ம் ஒரு கணவர் எனக்கு கிடைக்க வேண்டும் என நினைத்தேன் ஆனால் அவர்தான் என் கணவர் என்ற விஷயத்தை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன். வீட்டை விட்டு ஓடிப்போக நினைத்தேன். ஆனால், என்னால் அது முடியவில்லை என அந்த பெண் தெரிவித்துள்ளார். 
 
அந்த பழங்குடியின மக்கள், ஒரு பாரம்பரியத்தை கடைப்பிடிக்கின்றனர். அதாவது, ஒரு பெண் திருமணத்திற்கு பின் தன் கணவரை இழந்தால், இரண்டாவது திருமணத்தை அவர் கட்டாயம் செய்துக்கொள்ள வேண்டும். ஆனால், அந்த விதவை பெண்ணிற்கு பெண் குழந்தை இருந்தால் அந்த குழந்தையும் அந்த ஆணைதான் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும். 
 
இவ்வாறு இருக்கையில், மிட்டாமோனிக்கு தனது வளர்ப்பு தந்தையுடன் அவர் மூன்று வயதாக இருக்கும் போதே திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதே நிலைதான் அடுத்தடுத்த சந்ததிக்கும் தொடரும் என அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.