வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 26 செப்டம்பர் 2018 (11:01 IST)

இந்தியா - இலங்கை டி20 போட்டி: இந்திய பெண்கள் அணி அபார வெற்றி

இலங்கைக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி இலங்கையை தோற்கடித்தது.
இலங்கை கட்டுநாயகேவில் நேற்று இந்தியா – இலங்கை பெண்கள் அணிகளுக்கிடையேயான 5–வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பெண்கள் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய பெண்கள் அணி 18.3 ஓவர்களில் 156 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் கேப்டன் அதிகப்படியாக 63 ரன்களை எடுத்திருந்தார். அடுத்ததாக களமிறங்கிய இலங்கை பெண்கள் அணி இந்திய அணியின் அசுர பந்துவீச்சால் ரன் சேர்க்க முடியாமல் அடுத்தடுத்து அவுட்டாகி 17.4 ஓவர்களில் 105 ரன்கள் எடுத்து சுருண்டனர். 51 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய பெண்கள் அணி ஆட்டத்தைக் கைப்பற்றியது.