1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 22 நவம்பர் 2016 (12:06 IST)

பெண்ணிடம் குரங்கு செய்த சேட்டை: 16 பேர் பலி, 50 பேர் படுகாயம்!!

சிரியாவின், கடஃபா பிரிவைச் சேர்ந்த வியாபாரி ஒருவருக்கு சொந்தமான குரங்கு ஒன்றை அப்பகுதி மக்கள் செல்லமாக வளர்த்து வந்துள்ளனர்.


 
 
இந்நிலையில் கடஃபா மக்கள் வசிக்கும் பகுதி வழியாக மற்றொரு பழங்குடி இனமான அவ்லத் சுலைமான் பிரிவைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் சிலர் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சில கடஃபா இளைஞர்கள், குரங்கை மாணவிகள் மீது விட்டுள்ளனர்.
 
மாணவிகள் மீது பாய்ந்த அந்த குரங்கு, ஒரு மாணவியின் தலையில் அணிந்திருந்த ஹிஜாப்பை கிழித்து எரிந்துள்ளது. மாணவிகள் இதனை, தங்கள் பெற்றோரிடம் கூறியுள்ளனர். 
 
இந்த சம்பவம் குறித்து நியாயம் கேட்க கடஃபா மக்களின் இடத்திற்கு வந்துள்ளனர். இதனால், இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் முற்றி, ஒரு கட்டத்தில் அது கலவரமாக மாறியது. 
 
தொடர்ந்து 4 நாட்கள் இந்த கலவரம் நடைபெற்றுள்ளது. இந்த வன்முறை வெறியாட்டத்தில் இரு தரப்பிலும் சேர்த்து 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 50 பேர் படுகாயத்துடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.