வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 30 செப்டம்பர் 2018 (21:23 IST)

இந்தோனேஷியாவை அடுத்து பிஜித்தீவிலும் சுனாமியா?

இந்தோனேஷியாவில் சமீபத்தில் ஏற்பட்ட சுனாமியால் சுமார் 400 பேர் பலியான நிலையில் சற்றுமுன் பிஜித்தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுனாமி ஏற்படுமோ? என்ற அச்சம் அப்பகுதி மக்கள் மனதில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

சற்றுமுன் பிஜி தீவு அருகே சுமார் 6.6 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை என்றும், இருப்பினும் சுனாமி எச்சரிக்கை இதுவரை விடப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.