1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Modified: திங்கள், 17 அக்டோபர் 2016 (18:24 IST)

என் மகனை கொன்று உணவாக்கி விட்டனர் : தந்தை பகீர் புகார்

என் மகனை கொன்று உணவாக்கி விட்டனர் : தந்தை பகீர் புகார்

சிறையில் நடந்த கலவரத்தை பயன்படுத்தி, நரமாமிசம் சாப்பிடும் கும்பல் ஒன்று தன் மகனை கொன்று அவனை உணவாக்கி விட்டனர் என்று வெனிசுலா நாட்டைச் சேர்ந்த ஒருவர் பகீர் புகார் கூறியுள்ளார்.


 

 
ஒரு காலத்தில் எண்ணெய் வளத்திற்கு பெயர் போன நாடு வெனிசுலா, தற்போது பொருளாரத வீழ்ச்சி அடைந்து, அடிப்படை தேவைகளுக்கு அங்குள்ள மக்கள், கலவரம் செய்யும் நிலையில் இருக்கிறது.
 
அதிலும் அங்குள்ள சிறைகளில் அடிக்கடி கலவரம் நடப்பது வாடிக்கையாகி விட்டது. 120 கைதிகள் அடைத்து வைக்கக் கூடிய வசதியுள்ள சிறையில் தற்போது 300க்கும் மேற்பட கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் 8ம் தேதி, சிறைக்கு வந்த சில பார்வையாளர்கள் மற்றும் காவலர்களை சிறைக் கைதிகள் சிலர் சிறைப் பிடித்தனர். 
 
அதற்கு ஆதரவாகவும், எதிராகவும் சில கைதிகள் கிளம்பியதால், சிறையில் கலவரம் வெடித்தது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி, கொள்ளைச் சம்பவம் ஒன்றில் தொடர்புடையவராக கைது செய்யப்பட்ட ஜூவான் கார்லோஸ்(25) என்ற தன் மகன் கொலை செய்யப்பட்டு உணவாக்கப்பட்டான் என்று கார்லோஸின் தந்தை புகார் தெரிவித்துள்ளார்.

அதாவது, சிறையில் இருக்கும், நரமாமிசம் சாப்பிடும் நபர் ஒருவர் அந்த கலவரத்தை பயன்படுத்தி, தன்னுடைய சக கைதிகள் 40 பேருடன் சேர்ந்து ஜூவான் உட்பட 3 பேரை சிறைக்குள் உள்ள வேறொரு பகுதிக்கு கடத்திச் சென்று, அங்கு அவர்களை கொலை செய்து உணவாக்கியுள்ளான் என்று புகார் கூறியுள்ளார்.
 
அதை நேரில் பார்த்த ஒரு காவல் அதிகாரி தன்னிடம் கூறியதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் வெனிசுலா நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
கொல்லப்பட்ட தனது மகனின் எலும்பை கொடுத்தால் கூட, அதை வைத்து நான் ஈம சடங்குகளை செய்வேன் என்று போலீசாரிடம் அவர் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் இதுவரை போலீசாரால் அதை மீட்டுத் தரமுடியவில்லை என்பதுதான் சோகம்..