வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 24 ஜனவரி 2024 (16:48 IST)

பெண் அணியும் நீச்சலுடையை அணிந்து விளம்பரம் செய்த ஆண்: சர்ச்சைக்குள்ளான நிறுவனம்..!

பெண்கள் அணியும் நீச்சல் உடையை அணிந்து ஆண் ஒருவர் விளம்பரம் மாடலாக நடித்ததை அடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனம் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  
 
ஆஸ்திரேலியாவை சேர்ந்த  நீச்சல் உடை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று வழக்கமான பெண்களை வைத்து மாடலாக பயன்படுத்தி விளம்பர வீடியோவை வெளியிடும். ஆனால் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக பெண்கள் அணியும் நீச்சல் உடையை ஒரு ஆண் விளம்பர மாடலுக்கு அணிவித்து விளம்பரப்படுத்தியது. 
 
இந்த விளம்பரம் மிகப்பெரிய அளவில் வைரலான நிலையில் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  இந்த விளம்பரம் குறித்து பலர் கூறுகையில்  பெண் அணியும் நீச்சல் உடைக்கு ஆண் மாடலை பயன்படுத்தியது மிகவும் தவறு என்றும் இது அருவருப்பாக உள்ளது என்று தெரிவித்தனர்.  மேலும் இது பெண்களை சிறுமைப்படுத்துவதாக உள்ளது என்றும் பலர் கூறினார் 
 
இருப்பினும் இந்த  விளம்பரம் தவறானது அல்ல என்று சம்பந்தப்பட்ட நிறுவனம் தெரிவித்து வருவதாகவும், ஆண் மாடல்  அணிந்த  நீச்சல் உடை விளம்பரம் இன்னும் இணையதளங்களில் வைரல் ஆகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran