செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 5 செப்டம்பர் 2019 (12:27 IST)

மகாத்மா காந்திக்கு மேலும் பெருமை சேர்த்த ரஷ்யா.. காந்தியின் தபால் தலை வெளியீடு

மகாத்மா காந்திக்கு பெருமை சேர்க்கும் வகையில் ரஷ்யா, காந்தியின் தபால் தலையை வெளியிட உள்ளது.

ரஷ்யாவில் நடந்த கிழக்கு பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்திய பிரதமர் மோடி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பில் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கு இடையிலான வர்த்தக உறவு, முதலீடுகள், அணு சக்தி, கடல் சார் தொடர்பு ஆகியவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

இதன் பிறகு இந்தியாவின் ரஷ்ய தூதர் வெங்கடேஷ் ஷர்மா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், அவர் மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாளை ஒட்டி, சிறப்பு அஞ்சல் தலையாக மகாத்மா காந்தியின் அஞ்சல் தலையை வெளியிட ரஷ்ய அரசு முடிவு செய்துள்ளது என கூறினார்.

இந்த செயல் மகாத்மா காந்திக்கு மேலும் கவுரவப்படுத்தும் வகையில் அமையும் எனவும் கருதப்படுகிறது.