திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 7 டிசம்பர் 2020 (07:54 IST)

விவசாயிகளுக்கு ஆதரவாக லண்டனில் போராட்டம்: மோடிக்கு எதிராக முழக்கம்!

வேளாண் மசோதாவிற்கு எதிராக டெல்லியில் கடந்த 10 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் ஆரம்பித்த இந்த போராட்டத்திற்கு தற்போது தமிழகம் உள்பட பல மாநிலங்களில் இருந்து ஆதரவு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஏற்கனவே விவசாயிகள் போராட்டத்திற்கு தனது ஆதரவை கனடா பிரதமர் தெரிவித்தார் என்பதும் அதற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்தது என்பதும் தெரிந்ததே. தற்போது டெல்லியில் போராட்டம் செய்து வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக லண்டனிலும் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பாக விவசாயிகளுக்கு ஆதரவாக கோஷங்களும் பிரதமர் மோடியை கண்டித்து முழக்கமும் இந்தியர்கள் முழங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
விவசாயிகள்  போராட்டத்திற்கு உலகம் முழுவதும் ஆதரவு குவிந்து வருவதால் மத்திய அரசு இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது