ஒருநாள் பிரதமராக பதவியேற்ற 5 வயது சிறுமி
கனடாவில் ஒருநாள் பிரதமராவதற்கான கட்டிரை போட்டியில் வெற்றி பெற்ற 5 வயது சிறுமி ஒருநாள் பிரதமராக பதவியேற்றார்.
கனடாவில் ஒருநாள் பிரதமராவதற்காக குழந்தைகளுக்கு கட்டுரை போட்டி நடந்தது. அதில் பெல்லா மூஸ்(5) என்ற சிறுமி வெற்றி பெற்றார். அதைத்தொடர்ந்து பெல்லா மூஸ் பிரதமர் அலுவலகத்தில் ஒருநாள் பிரதமராக பதவியேற்றார்.
இதையடுத்து அவர் ஒரு கோட்டை கட்ட வேண்டும் என உத்தரவிட்டாள். அதன்படி அவரது கட்டளையை ஏற்றுக்கொண்டு ஜஸ்டின் டிருடியோ தலையணைகள், நாற்காலிகள், மேஜை மற்றும் ஓவியங்களுடன் கூடிய போர்வையால் கோட்டை கட்டினார். அதில் அந்த சிறுமி மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ஒருநாள் பிரதமர் சிறுமி பெல்லாவை சிறிப்பித்து மகிழ்வித்து அனுப்பினார்.