வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinojkiyan
Last Modified: புதன், 16 அக்டோபர் 2019 (20:26 IST)

கடைசி ஆசை : இறந்தவரின் இறுதிச் சடங்கின் போது சிரித்த உறவினர்கள்.. வைரல் வீடியோ

ஒருவர் இறந்துவிட்டால் அவரது உறவினர்கள், நண்பர்கள், உள்பட அனைவரும் இறுதிச் சடங்குக்கு வந்து கவலையுடன் கண்ணீர் வடிப்பர் சோகத்துடன் இருப்பர். ஆனால் தான் ஒருவரின் இறுதிச் சடங்கின் போது அங்கு வந்த அனைவரும் சிரித்த சம்பவம் நடந்துள்ளது.
ஐரோப்பியாவில்  அயர்லாந்தில் நாட்டில்  லீனெஸ்டர் என்ற மாகாணத்தில்  உள்ள கில்கென்னி என்ற இடத்தில் வசித்து வந்தவர் ஷே பிராட்லி. முன்னாள் ராணுவ வீரரான இவர் கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி உயிரிழந்தார்.
 
தான் இறப்பதற்கு முன்னமே, பிரிட்லி,  தனது குடும்பத்தினரிடன்ம் தனது இறுதிச சடங்கு நடக்கும் போது யாரும் அழக்கூடாது என கூறியிருந்தார்.
 
அதனால் அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்ற அனைவருமே கவலைப் பட்டு அழாமல் சிரித்தனர். மேலும் தனது குரலில் பதிவு செய்த ஒரு ஆடியோவையு நிகழ்சியில் ஒலிக்க விட்டனர். இந்த  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.