குடியிருப்பவர் வீட்டில் பெண்ணுடன் உல்லாசம் - உரிமையாளரை காட்டிக் கொடுத்த சிசிடிவி கேமரா


Murugan| Last Updated: சனி, 3 டிசம்பர் 2016 (14:04 IST)
வீட்டின் உரிமையாளர் ஒருவர், குடியிருப்போர் இல்லாத நேரத்தில், அவர்களின் வீட்டின் படுக்கையறையில் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 
அமெரிக்காவின் கொலரடோ பகுதியில் கார்லஸ் குஜாடா என்பவருக்கு சொந்தமாக ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டை லோகன் பியர்ஸ் என்பவருக்கு அவர் வாடகைக்கு விட்டிருந்தார்.
 
அந்த வீட்டில் லோகன் தனது மனைவியுடன் தங்கியிருந்தார். அவர்கள் இருவரும் வேலைக்கு செல்வதால், அந்த விட்டின் படுக்கை அறை உட்பட அனைத்து அறைகளிலும் லோகன் சிசிடிவி கேமராவை பொருத்தியிருந்தார். மேலும், கேமரா பதிவுகளை தனது மொபைல் போனில் பார்க்கும் வசதியையும் அவர் வைத்திருந்தார்.
 
இந்நிலையில், லோகன் தனது அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது, அவரது செல்போனுக்கு ஒரு எச்சரிக்கை ஒலி அடித்துள்ளது. எனவே, தனது வீட்டில் என்ன நடக்கிறது என்பதை அவரது செல்போன் மூலம் பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
 
வீட்டின் படுக்கை அறையில், அவரது வீட்டின் உரிமையாளர் கார்லஸ், ஒரு பெண்ணை அழைத்து வந்து உல்லாசமாக இருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். அதோடு மட்டுமில்லாமல், லோகனின் மனைவியின் திருமண உடையை எடுத்து,  படுக்கையை சுத்தம் செய்துள்ளார்.
 
இதையெல்லாம் கண்டு கோபம் அடைந்த லோகன், இதுபற்றி ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 


இதில் மேலும் படிக்கவும் :