அடுத்த 48 நாட்களுக்கு நீடிக்கப்படும் அத்திவரதர் தரிசன வைபவம்?

Last Modified செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (13:49 IST)
அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 
 
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். அவரை தரிசிக்க இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். 
 
ஜூலை 31 ஆம் தேதி வரை சயனகோலத்தில் காட்சித் தந்த அத்திவரதர், ஆகஸ்து 1 ஆம் தேதியிலிருந்து நின்ற கோலத்தில் காட்சித் தந்து வருகிறார். வருகிற 17 ஆம் தேதி மீண்டும் குளத்திற்குள் செல்கிறார். 
40 ஆண்டுகளுக்கு ஒரு முறை எழுந்தருளி 48 நாட்கள் பக்தர்களுக்கு காட்சித் தரும் அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 
 
இந்த முறையீடு மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்றம் உறுதி அளித்துள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :