வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 7 நவம்பர் 2016 (11:09 IST)

அத்துமீறி கிழக்கு சீனக்கடல் பகுதியில் நுழைந்த சீன கப்பல்: ஜப்பான் எதிர்ப்பு

தென் சீனக்கடலின் அடிப்பகுதியில் எண்ணெய், இயற்கை வாயு வளம் உள்ளது. இதில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. செயற்கையான தீவுகளையும் அதில் உருவாக்கி உள்ளது. 


 
 
ஆனால் தென் சீனக்கடலில் எங்களுக்கும் உரிமை உண்டு என்று பிலிப்பைன்ஸ், ஜப்பான், வியட்நாம், மலேசியா, புருனை, தைவான் போன்ற நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன.
 
இதேபோன்று கிழக்கு சீனக்கடலிலும் பிரச்சினைகள் உள்ளன. இதை சீனாவும், ஜப்பானும், தென்கொரியாவும் உரிமை கொண்டாடி வருகின்றன.
 
இந்த நிலையில் கிழக்கு சீனக்கடலில் சர்ச்சைக்குரிய செங்காகு, டையாயு சிறுதீவு பகுதியில் சீனாவின் 4 கப்பல்கள் நுழைந்தன.
 
தனது எதிர்ப்புக்கு மத்தியில் சீனா அங்கு தனது கப்பல்களை அடிக்கடி அனுப்பி, பிராந்தியத்தில் பதற்றம் ஏற்படுத்துவதாக ஜப்பான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.