வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 2 ஜூன் 2015 (13:45 IST)

நரேந்திர மோடியை கைது செய்தால் ரூ. 100 கோடி பரிசு - சிராஜ் அல் ஹக் கொக்கரிப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கைது செய்யும் நபர்களுக்கு ரூ. 100 கோடி பரிசு அளிக்கப்படும் என ஜமாத் இ இஸ்லாமி பாகிஸ்தான் கட்சியின் தலைவர் சிராஜ் அல் ஹக் கூறியுள்ளார்.
 
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான ராவல்கோட்டில், ஜமாத் இ- இஸ்லாமி கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் அக்கட்சி தலைவர் அல் ஹக் கலந்து கொண்டு பேசினார். 
 
அப்போது அவர் பேசுகையில், காஷ்மீர் பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வரும் ஒரு பிரச்சனை. இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு உதவவோ, இந்தியாவுடன் நட்புறவு கொள்ளவோ பாகிஸ்தான் அரசியல்வாதிகள் விரும்புவர்கள்  நாட்டின் சேத துரோகியாக கருதப்படுவர். இந்தியாவை விரும்பும் நபர்களுக்கு பாகிஸ்தானில் இடமில்லை.
 
காஷ்மீரில் நடக்கும் கொடுமைகளை பார்த்து பாக்கிஸ்தான் அரசியல்வாதிகள் பலர் கண்டுகொள்ளாமல் உள்ளனர். காஷ்மீருக்கு விடுதலை தரும்பட்சத்தில்தான் பாகிஸ்தான் இந்தியாவுடன் நட்பு வைத்து கொள்ள வேண்டும்.
 
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், அவரது ஏஜன்டுகளுக்கும் நான் தெரிவித்துக் கொள்வது ஜிகாதிகளை உங்களால் பிடிக்க முடியாது. ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவரான சையீது சலாவுதீனை கைது செய்ய நரேந்திர மோடி அரசு ரூ. 50 கோடி கோடி பரிசு அறிவித்துள்ளது. இது எந்த காலத்திலும் நடக்காத ஒரு செயலாகும்.

இந்திய பிரமதர் நரேந்திர மோடியை கைது செய்யும் நபர்களுக்கு ரூபாய் 100 கோடி பரிசாக எங்கள் இயக்கம் வழங்கும் என பேசியுள்ளார்.
 
இவரது இந்த பேச்சுக்கு பாக்கிஸ்தானிலும், இந்தியாவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பிரமதர் நரேந்திர மோடி உலக தலைவர்களிடம் நல்லுறவை பேணி வரும் நிலையில், இவரது இந்த பேச்சு  பாகிஸ்தானுக்கு உலகளவில் பெரும் தலைவலியையும் ஏற்படுத்தும் என கூறப்படுகின்றது.