புதன், 5 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 13 ஜனவரி 2019 (13:34 IST)

உலக வங்கி தலைவர் பதவிக்கு போட்டியிடும் டிரம்ப் மகள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை விட அமெரிக்க மக்களிடையே பெரும் புகழ் பெற்று விளங்குகிறார் அவரது மகள் இவானா டிரம்ப். சமூக சேவை செய்யும் அக்கறையில் இருக்கும் இவர் சமீபத்தில் இந்தியா உள்பட பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார்

இந்த நிலையில் சமீபத்தில் உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம் திடீரென ராஜினாமா செய்வதாக அறிவித்திருப்பதால் விரைவில் உலக வங்கிக்கான புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.

உலக வங்கி தலைவர் பதவிக்கு பலர் போட்டியிட்டாலும்  இவாங்கா டிரம்ப் மற்றும் ஐநாவுக்கான அமெரிக்க முன்னாள் தூதர் நிக்கி ஹா லே ஆகியோர்களில் ஒருவரே தேர்வு செய்ய வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக உலக வங்கியில் அமெரிக்கா மிகப்பெரிய பங்குதாரராக இருப்பதால் அமெரிக்கர்களில் ஒருவரே இதுவரை‌ உலகவங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இவாங்கா, நிக்கி ஹாலே இருவரும் அமெரிக்கர்களாக இருப்பதால் இருவரில் ஒருவர் வெற்றி பெறுவது உறுதி