இத்தாலி மாஃபியாவுக்கும், ஐ.எஸ். இயக்கத்திற்கும் இரகசியத் தொடர்பு!
இத்தாலியாவில் செயல்படும் மாஃபியா கும்பலுக்கும், ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்திற்கும் இரகசியத் தொடர்பு உள்ளது தற்போது அம்பலமாகி உள்ளது.
லிபியாவில் இயங்கும் ட்ராங்ஹெட்ட [Ndrangheta] என்ற மாபியா கும்பல் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு வைத்துள்ளது. மேலும் இந்த கும்பல், யுனெஸ்கோ அமைப்பால் பாதுகாக்கப்பட்ட அகழ்வாராய்ச்சிப் பொருட்களை வாங்கி வைத்திருக்கிறது.
இதனை பிரபல இத்தாலி நாட்டின் லா ஸ்டம்பா [La Stampa] என்ர தினசரி இதழின் ஊடகவியாளர் டொமென்கோ குய்ரிகோ [Domenico Quirico] என்ப்வர் இதனை கண்டறிந்துள்ளார். அவர், புராதன கலைப் பொருட்களை வாங்கும் வணிகர் போன்று நடித்து இதனைக் கண்டுபிடித்துள்ளார்.
உக்ரைன், மோல்டாவியா போன்ற நாடுகளில் இருந்து ஆயுதங்களை வாங்கும் இத்தாலி மாஃபியா அவற்றை ஐ.எஸ். அமைப்பிற்கு விற்று வந்துள்ளது. அதற்குப் பதிலாக ஐ.எஸ்., லிபியா அகழ்வாராய்ச்சிப் பகுதிகளில் கொள்ளையடிக்கப்பட்ட கலைப் பொருட்களை, மாஃபியாவிற்கு விற்கின்றது.
இது குறித்து கருத்துத் தெரிவித்த இத்தாலி காவல் அதிகாரிகள், "பல வருடங்களுக்கு முன்பே, கொமோரோ மாபியாக் குழு, மத்திய கிழக்கில் உள்ள பல இஸ்லாமிய மத அடிப்படைவாத ஆயுதக் குழுக்களுடன் தொடர்புகளைப் பேணி வந்தது" என்றனர். மேலும், தமக்கு இந்த விஷயம் ஏற்கனவே தெரியும் என்றும் குறிப்பிட்டனர்.