பிணைக்கைதிகள் கழுத்தறுத்து வீடியோ வெளியிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ்


லெனின் அகத்தியநாடன்| Last Modified வியாழன், 15 செப்டம்பர் 2016 (04:28 IST)
சிரியாவில் பிணைக்கைதிகள் கழுத்தை அறுத்து தொங்கவிடும் கொடூர வீடியோவை ஐ.எஸ். பயங்கரவாதிகள் வெளியிட்டு உள்ளனர்.
 
 
சிரியா, இராக் நாடுகளின் ஒரு பகுதியை ஒருங்கிணைத்து “இஸ்லாமிய அரசு” எனும் புதிய நாட்டை ஐ.எஸ். பயங்கரவாதிகள் உருவாக்கி வருகின்றனர். ஐ.எஸ். பயங்கரவாதிகள் உலகிற்கே பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். தனிநாட்டை உருவாக்குகிறோம் என்ற பெயரில் பல கொடூர சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர்.
 
இந்நிலையில், பிணைக்கைதிகளின் கழுத்தை அறுக்கும் கொடூர வீடியோ ஒன்றினை ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர் வெளியிட்டுள்ளனர். ஆரஞ்சு நிற உடை அணிவிக்கப்பட்ட பிணைக்கைதிகள் கைகள் பின்புறம் கட்டப்பட்டுள்ளது.
 

 
அவர்களை முழங்காலிட்ட நிலையில் உட்காரவைத்து பின்புறம் நிற்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆடு, மாடு மற்றும் மிருகங்களை அறுப்பது போன்று பிணைக் கைதிகளின் கழுத்தை ஈவு இரக்கமின்றி அறுக்கின்றனர். ரத்தம் பீறிட்ட நிலையில் பிணைக் கைதிகள் சாய்ந்து விழுகின்றனர்.
 
மேலும் அவர்களின் உடலை இறைச்சிக் கடையில் ஆடு,மாடுகளை தொங்கவிடுவது போன்று கொலை செய்யப்பட்டவர்களையும் தொங்க விடுகின்றனர். இந்த காட்சிகள் கொண்ட 12 நிமிட வீடியோக்களை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
 
இக்கொலைக்கள் வடகிழக்கு சிரியாவில் டெரஸ்-ஷார் நகரில் ஆடு, மாடுகளை வெட்டும் கொலை களத்தில் வைத்து நடத்தப்பட்டுள்ளது. இவர்கள் அமெரிக்காவுக்கு உளவு பார்த்தவர்கள் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :