வியாழன், 12 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 2 மார்ச் 2026 (16:13 IST)

இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தை குறிவைத்து தாக்கிய ஈரான்.. கமேனியின் மறைவுக்கு பழிவாங்காமல் விடமாட்டோம் என சூளுரை..!

இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தை குறிவைத்து தாக்கிய ஈரான்.. கமேனியின் மறைவுக்கு பழிவாங்காமல் விடமாட்டோம் என சூளுரை..!
மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகத்தை குறிவைத்து ஈரான் அதிரடி ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது. 
 
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, கடந்த சனிக்கிழமை அமெரிக்க-இஸ்ரேல் கூட்டு தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானின் புரட்சிகர காவல் படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 
 
டெல் அவிவ் நகரில் உள்ள பிரதமரின் அலுவலகம் மற்றும் முக்கிய ராணுவ நிலைகளை இலக்கு வைத்து இந்த திடீர் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
 
இந்த தாக்குதல் காரணமாக இஸ்ரேல் முழுவதும் அபாய எச்சரிக்கை மணிகள் ஒலிக்க தொடங்கியுள்ளன. கமேனியின் மறைவுக்கு பழிவாங்காமல் விடமாட்டோம் என்று சூளுரைத்திருந்த ஈரான், தற்போது நேரடியாக இஸ்ரேலிய பிரதமர் அலுவலகத்தையே தாக்கியிருப்பது போரின் போக்கை மாற்றியுள்ளது. 
 
இந்த தாக்குதலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இஸ்ரேல் தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், ஈரானின் இந்த ஆக்ரோஷமான நடவடிக்கை, மத்திய கிழக்கில் ஒரு முழு அளவிலான போருக்கு வழிவகுக்கும் என சர்வதேச நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன.
 
Edited by Siva