செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 18 ஜூன் 2022 (12:31 IST)

Internet Explorer-க்கு கல்லறை - இணையத்தில் வைரல்!

தென் கொரிய மென்பொருள் பொறியாளர்  Internet Explorer மறைவை நினைவுகூரும் வகையில்  கல்லறை எழுப்பி உள்ளார். 
 
27 ஆண்டுகளுக்குப் பிறகு, மைக்ரோசாப்ட் இறுதியாக அதன் பழமையான உலாவியான இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை (IE) நிறுத்தியுள்ளது.  ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்திய உலாவி இப்போது அதிகளவு பயணர்களால் பயன்படுத்தப்படுவதில்லை. 
 
விண்டோஸ் 95 க்கான கூடுதல் தொகுப்பாக 1995 இல் முதன்முதலில் வெளியிடப்பட்டது. 2003 இல் உலாவி 95 சதவீத பயனர்களை எட்டியிருந்தாலும், புதிய மற்றும் வேகமான போட்டியாளர்கள் தொழில்நுட்ப சந்தையில் நுழைந்ததால் நிலை படிப்படியாகக் குறைந்தது. 
 
பல பயனர்கள் IE மெதுவாக இருப்பதாகவும், செயலிழக்கக்கூடியதாகவும், ஹேக்குகளுக்கு ஆளாகக்கூடியதாகவும் இருப்பதாக புகார் கூறத் தொடங்கினர். இதனால் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சர்ச்சிங் பிரவுசரான Internet Explorer தன் சேவையை நிறுத்திக்கொண்டுள்ளது.
 
இந்நிலையில் தென் கொரிய மென்பொருள் பொறியாளரான ஜங் கி-யங், Internet Explorer மறைவை நினைவுகூரும் வகையில் "e" கொண்ட கல்லறை எழுப்பி நிறுவியுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.