இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
இந்தோனேஷியாவின் மொலுக்கா தீவு அருகே கடல் பகுதியில் ரிக்டர் 7.1 அளவுக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கினா,. வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.
இந்நிலையில் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். பிறகு சிறிது நேரத்தில் சுனாமி எச்சரிக்கை திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டது. நிலநடுக்கத்தின் போது ஏற்பட்ட சேதங்களை மக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.