Daily Horoscope

கழுத்தை சுற்றிய மஞ்சள் மலைப்பாம்பு; மர்ம மரணம் குறித்து போலீஸ் விசாரணை

Written By Sugapriya Prakash
Updated: திங்கள், 4 நவம்பர் 2019 (12:01 IST)
அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் மஞ்சள் நிற மலைப்பாம்பு ஒன்று கழுத்தை இறுக்கியப்படி மரணித்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
அமெரிக்காவின் இண்டியானா பகுதியைச் சேர்ந்த லாரா ஹர்ஸ்ட் என்ற இளம்பெண் தனது வீட்டில் 140க்கும் மேற்பட்ட பாம்புகளை வளர்த்து வந்துள்ளார். இந்த பாம்புகளுடன் மஞ்சள் நிற மலைப்பாம்புகளையும் வளர்த்து வந்துள்ளார். 
 
இந்நிலையில் கடந்த வாரம் லாராவின் வீடு பூட்டப்பட்டு துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதயடுத்து போலீஸார் வீட்டின் உள்நுழைந்து பார்த்த போது  மஞ்சள் நிற மலைப்பாம்பு கழுத்தில் சுற்றிய நிலையில் லாரா இறந்து கிடந்தார்.
 
லாராவின் மரணம் சந்தேகத்திற்குரிய மரணமாக போலீஸாரால் பார்க்கப்படுகிறது. லாரா போதையில் மயங்கி விழுந்ததும், பாம்பு அவரின் கழுத்தை இறுக்கியிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது. 

எல்லாம் காட்டு

11 ஆயிரம் கோடி ஒப்பந்தம்!.. 7 ஆயிரம் பேருக்கு வேலை!. லண்டனில் கலக்கும் விஜய்!..

செயற்கை சூரியன் தயாரிக்கும் முயற்சியில் இந்திய விஞ்ஞானிகள்.. இது நடந்துவிட்டால் என்ன ஆகும்?

விஜய் என்னை மீட் பண்ணாம லண்டன் போயிட்டாருன்னு யார் சொன்னா?!.. மலேசிய பிரதமர் பேட்டி!..

ஐடி வேலை இனி வேண்டாம்.. உபேர் கார் ஓட்டினால் வாரம் ரூ.46000 வருமானம்.. மாற்றி யோசிக்கும் ஜென் சி

காவிரி படுகை பகுதியில் ஐந்து புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகள்.. விவசாயிகள் கடும் எதிர்ப்பு...

அடுத்த கட்டுரையில்
Show comments