திங்கள், 24 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 9 செப்டம்பர் 2016 (13:38 IST)

தாடி, மீசை வளர்த்த இந்திய பெண் சாதனை

இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண் ஒருவர் தாடி, மீசை வளர்த்து கின்னஸ் சாதனை பட்டியிலில் இடம்பெற்றுள்ளார்.


 

 
ஹர்னாம் கவுர்(24) என்ற பெண் பாலிசிஸ்டிக் ஓவர் சின்ட்டோம் என்ற நோயால் பாதிக்கப்பட்டவர். இதனால் இவருக்கு ஆண்களை போல முகத்தில் மீசை, தாடி வளர தொடங்கியது. 
 
11 வயது முதல் முடி வளர தொடங்கியுள்ளது. முடி வளர தொடங்கிய ஆரம்பத்தில் ஷேவ் செய்து வந்துள்ளார். பின்னர் 16 வயது முதல் ஷேவ் செய்வதை நிறுத்திவிட்டு ஆண்களை போலவே முடி வளர்க்க தொடங்கியுள்ளார்.
 
தற்போது இவர் இளம்வயதில் தாடி, மீசை வளர்த்ததற்காக கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.